(Tuesday, May 4, 2010)

என் கவிதை-6

தோழிக்கு தோழமையுடன்


உன் மனதில்...
நட்பு என்ற பூ பூக்க
நாளெல்லாம் காத்திருக்கும்
அற்ப பூக்களில் நானும் ஒருவன்!

ஒரு முறை உன்னை பார்த்து
பல முறை அதை நினைத்து
நட்பு வளருமோ என வேர்த்து
கொண்டு கவிதை தீட்டும் கலைஞன்-

கற்பனையில் மட்டும் நினையாமல்
கற்பனையை உருக்கி
கவிதை வடித்து- உன்
காலடியில் கொட்ட துணிகிறான்;

துக்கம் மறக்க 
தோழமை வேண்டி
ஏக்கம் பிறக்க
தோழமைக்கு தூது விடுகிறான்;

விண்ணை முட்டும்
வீரியம் உள்ள
பண்பை கொண்ட 
உன்னிடம் வேண்டி கேட்கிறான்

கேட்பதற்கு அரிய 
கரமாகிய- நட்பு கரத்தினை.
அக்கலைஞன் அன்புக்கு
ஏங்கும் சிறுவனாகிய நானே!!! 
                                                                
                                                                -K.Pravinkumar
                          கவிஞர் கா.பி

0 comments:

Post a Comment