(Sunday, April 18, 2010)

என் கவிதை-4

தமிழ் என்ன அருமையான அருமை
தமிழ்-என் தாய் மொழி
அழியும் மொழியோ என
அச்சப்படச் செய்த மொழி

தமிழை...
காப்பாற்றவொன்றும் நான் தேவையில்லை
கரைசேர்க்கவும் நான் தேவையில்லை
களையெடுக்கவும் நான் தேவையில்லை

அதன்
காற்றோட்டத்தில் கரைந்து போய்
காலபூராவும் காலடியில் கிடந்தால் போதும்
காலன் கூட கண்ணீர்விட்டு
கைகொடுத்து போயிவிடுவான் கண்ணியமாக.

காதுகேலாதவன் கூட கண்ணால்
கண்டு மகிழ்ச்சி கொள்வான்-தமிழ்
பேசும் முகத்தில் ஏற்படுத்தும் முத்துசிதறலை
கண்டு-மேனியில் ஏற்படுத்தும் அதிர்வை உணர்ந்து

நான் கவலை கொண்டேன்-தமிழை
காப்பாற்ற யாருமில்லையோ என்று
அது பதிலுக்கு கவலைபட்டது-தான்
யாரையும் காப்பாற்ற இயலவில்லையே என்று


உடனே தமிழ் அன்னையிடம் செப்பினேன்
என் தமிழ் அன்னையே
என் அன்னையின் வாயால்
உன்னை அறியலானேன்

உலகமே நீயென உணர்ந்து
மகிழ்வாக வாழ்ந்து வர
மற்ற மொழியும் என்னை தீண்ட
உன்னை மறந்து பிதற்றலானேன்

பாவிமனம் போர பாதை புரிந்துகொண்டு
பாதி வழியில் உன்னை அறிய
தாயே நீ போதும் என
காலடியில் கிடக்க தயாரானேன்!

காலடியில் கிடந்து கொண்டு
கதியற்று போயிருக்க-என்
காவியம் படைத்து பிழைத்துகொள்ளேனென
காட்டிய வழியில் நடை பயின்றேன்

நற்கவிதைகள் பிறந்து தாளை ரொப்ப
புது வழிகள் பிறந்து வாழ்க்கை சொக்க
வாழ்த்த நினைத்து வார்த்தையற்று நிக்க
வணங்கிய கையை வளைத்து வரையதுணிகிறேன்
-உன் காவியத்தை, என்று.

சிரித்துக் கொண்டே அணைத்துக் கொண்டால்
அன்னைக்கே உரிய அன்பை காட்டி
-K.PravinKumar (KPK)
(கவிஞர் கா.பி)

1 comments:

இராமநாதன் said...

தமிழனுக்கு தலை வணக்கம்

Post a Comment