(Friday, April 16, 2010)

என் கவிதை-2

இளைஞன் ஒருவன்

இளைஞன் ஒருவன்...
    வெற்றி வேண்டும் வெற்றி வேண்டும்
         வெறியுடன் உழைக்கிறேன்
     வேகத்தையும் விவேகத்தையும் சேர்த்து
         வைத்து உழைக்கிறேன்
     வெற்றி பெற்ற பலமனிதரை பார்த்து
         பார்த்து உழைக்கிறேன்
     வேதனையையும் சோதனையையும் தாண்டி
         தாண்டி உழைக்கிறேன்

     வெள்ளி தங்கம் காசுகளை
         எண்ணாமல் உழைக்கிறேன்
     வேற்றுமையை கலையெடுக்க வேண்டி
         ஓடி உழைக்கிறேன்
     புத்தம்புது பூமிதனை படைத்-
         தெடுக்க உழைக்கிறேன்
     புதுமைகளை புகுத்திவிட பாடி
         ஓடி உழைக்கிறேன்


     பட்டென்று தண்ணீர் பட
         துடித்தெழுந்து பார்க்கிறேன்
     உழைத்ததெல்லாம் கனவினில்தான்-என
         உணர்ந்து வேர்க்கிறேன்
     சட்டென்று அவ்விடத்தில் நான்
         படுத்து தூங்கினேன்
     விட்ட கனவு வாராதா-என
         நினைத்து ஏங்கினேன்

            “இளைஞா....
     கனவினில் தான் வெற்றியென
         ஒருபோதும் நினையாதே
     கனவினை தான் கண்டுவிட்டு
         உழைப்பதை நீ மறவாதே

             இளைஞன் கனவினிலே ஒருவன்
         ஒளியாய் வந்தான்
     மேற்கண்ட வரியை அவனுக்கு
         பதிலாய் தந்தான்
-K.PravinKumar (KPK)
(கவிஞர் கா.பி)

1 comments:

Unknown said...

நன்றிநண்பரே என்னை பிறகு எப்பொழுது தொடர்புகொள்கிறிர்

என்ன நண்பரே நேற்று நான் கூறியது சரியா

Post a Comment