(Tuesday, April 13, 2010)

என் கவிதை-1

பிரிவின் வலி
மனதிற்குள்ளே வலியொன்னு தெரியுது
வார்த்தை கூட வெளிவர மறுக்குது
பிரிவை பற்றி உதடென்ன சொல்வது
கண்கள் மட்டும் கண்ணிரால பேசுது!!!


நட்பென்ற வார்த்தையிலே துவங்கினோம்!
நாளேல்லாம் பேசிதான் பழகினோம்!
துன்பத்திலும் கைதந்து உதவினோம்!
இனிஎப்படிதான் நாமெல்லாம் விலகுவோம்?

கல்லூரி வாழ்க்கை கண்முன் வந்திநிற்க
மனதின் போக்கை ஞாபங்கள் வென்றுநிற்க
பிரியும் நாள் இன்றுதான் என்றிருக்க
ஆட்டம் பாட்டமென நாள்முழுதும் சென்றிருக்க

முகத்தினிலே புன்னகையை பூக்கவிட்டு
மனதினிலே அழுகையைதான் தொடரவிட்டு
பிரிவிலும் சோலைவனமாய் தோன்றிடுவோம்!!!
பிரிந்தபின் பாலைவனமாய் போயிடுவோம்?????????


-K.PravinKumar (KPK)
(கவிஞர் கா.பி)





(குறிப்பு: இக்கவிதை எனது கல்லூரி வாழ்வின் முடிவை எனது நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக ( பிரிவு உபாச்சார நிகழ்ச்சிகாக) எழுதியது. என் கல்லூரி நண்பர்களுக்கே என்னை கவிஞனாக்கிய சிறப்பு சாரும். அதனால் அவர்களுக்கு இதை காணிக்கையாக்குகிறேன். நன்றி)

1 comments:

Post a Comment